Tamil-News-Guide

இதழாளர்களுக்கும், செய்தி ஆர்வம் கொண்டவர்களுக்குமான இணைய செய்தி கையேடு.

இதழியல் துறையில் ஆர்வம் உள்ளவர்கள் செய்திகளை பின் தொடரவும் கூடுதல் தகவல்களை தெரிந்து கொள்ளவும் அவசியம் அறிந்திருக்க வேண்டிய செய்தி தளங்களையும், வளங்களையும், கருவிகளையும் விரிவாக அறிமுகம் செய்யும் இணைய கையேடு இது. இதழாளர்கள் மட்டும் அல்ல, செய்திகளில் ஆர்வம் உள்ள எவருக்கும் இந்த கையேடு பயனுள்ளதாக அமையும். அதோடு, செய்திகளில் கவனம் செலுத்துவதன் அவசியத்தையும் உணர்த்தக்கூடியது.

இணைய செய்தி கையேடு

என்ன?

ஏன்?

யாருக்கு?

என்ன பயன்?

மேலும்: இணையத்தில் தகவல்களை தெரிந்து கொள்ள கூகுள் மட்டுமே போதும் என்பது மாயை, இப்போது சாட்ஜிபிடி இந்த இடத்திற்கு வந்திருப்பதாக நினைப்பதும் பிழை. தகவல்களை கண்டறிவதற்கான மூல ஆதாரங்கள் நம் வசம் இருப்பது அவசியம்.

மூல பட்டியலும், இணைய செய்தி கையேடும்!

இந்த இணைய செய்தி கையேடு உண்மையில், 8 ஆண்டுகளுக்கு முன், டிஜிட்டல் இதழியல் வகுப்பில் முதுகலை மாணவர்களுக்கான பரிந்துரையாக உருவாக்கப்பட்ட பட்டியல். செய்திகளுக்கான இணையதளங்கள் மட்டும் அல்லாமல், செய்தி சேகரிப்பு நோக்கில் ஆய்வு நோக்கில் பயன்படக்கூடிய தளங்கள், வளங்கள் மற்றும் கருவிகளாக இருக்க கூடிய தளங்களும் பட்டியலிடப்பட்டன. தகவல் சரிபார்ப்பிற்கு உதவும் தளங்களும் இடம்பெற்றன.
8 ஆண்டுகள் ஆகிவிட்ட நிலையில், இந்த பட்டியலை புதுப்பிக்க வேண்டிய தேவை மற்றும் புதிய தளங்களையும், வளங்களையும் சேர்க்க வேண்டியதன் தேவை உணர்ந்ததோடு, இந்த பட்டியலை முழு வீச்சிலான கையேடாக உருவாக்கும் நோக்கத்துடன் இந்த தளம் அமைக்கப்பட்டுள்ளது.
முதலில் உருவாக்கப்பட்ட மூல பட்டியலை கீழே காணலாம். இணைய செய்தி கையேட்டில் இடம்பெறும் தளங்களை மேலே உள்ள பகுதிகளில் அணுகலாம்

S.NOசெய்திஆய்வுகருவிகள்செய்தி வளங்கள்தகவல் சரி பார்ப்பு
1.பிபிசிகுவோராபாக்கெட்.காம்கூகுள்மேப்ஸ்மேனியாஸ்னோப்ஸ்
2.கார்டியன்

டக்டக்கோகூகுள் அலெடர்ட்ஸ்சேஞ்.ஆர்க்நோயுவர்மீம்
3.பஸ்ஃபீட்வேபேக்மிஷின்கேன்வாபிராடக்ட் ஹண்ட்டைனிஐ
4.ஹேக்கர் நியூஸ்ரெட்டிட்பெரிஸ்கோப்https://wikileaks.org/பேக்ட்செக்கர்
5.பிட் ஆப் நியூஸ்சிமிலர் சைட்ஸ்பிட்.லைஇந்தியா ஸ்பெண்ட்ட்ரூத் ஆர் பிக்ஷன்

இதழியல் மாணவர்கள், இதழியல் ஆர்வம் கொண்டவர்க்ளுக்கான கையேட்டிற்கான அடிப்படை பட்டியல் இது. உங்கள் கருத்துககளை பகிரவும்.